Wednesday, September 17, 2008

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி பார்த்தேன்.

வருகிறோம் வருகிறோம் இந்த மாதத்தில் என்ற விளையாட்டை குழந்தைகள் விளையாட பார்த்தேன். கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

நாம் குழந்தைகளுக்கு அந்த மாதிரி விளையாட்டுக்களை அறிமுகப் படுத்த வில்லையோ என்ற வருத்தம் அலைமோதுகிறது . சின்ன வயதில் விளையாடியது நினைவுக்கு வந்தது . தொலை தூரமானாலும் நடை . அளவான.தேவைகள் . நிறைவான வாழ்க்கை என்று வாழ்ந்த அந்த காலம் நன்றாக இருந்ததா புரியவில்லை.

பில்லைப்பருவத்து விளையாட்டுக்களை இப்படி தொலைக்கலாமா யோசியுங்களேன்

நமது கலாசாரம் . அதில் கதைகளும் கற்பனைகளும் இருந்தாலும் அவற்றோடு கூட நம் கலாச்சாரத்தை நேசிப்பதும் ஒரு அழகல்லவா .குற்றஞ் குறைகள் இருந்தாலும் நம் அம்மாவை நேசிக்கிரோமே அதுபோலே.ஒ அம்மாவைதான் முதியோர் இல்லத்துக்கு அனுப்ப தயாராக இருக்கிறோமே என்கிறீர்கள; அப்புறம் என்ன சொல்ல