Saturday, June 9, 2012

வணக்கம் நண்பர்களே !
      பெங்களுரு தட்பவெப்ப நிலை சுகமாக இருக்கிறது .இயற்கையின் அமர்த்தலானஅழகும் செயற்கையின் ஆர்பாட்டமான அழகும் பார்க்க அருமை .
     மரங்களைப்  பாதுகக்கிறர்கள் .  
           பெரிய தெருக்களின் இருமருங்கிலும்  கண்கொள்ளா காட்சிதான்.
   ஒரு புறம் பெரிய பெரிய மரங்கள்.இன்னொரு புறம்  பெரிய பெரிய கட்டிடங்கள் .       எனக்கு ஏனோ   கோயம்புத்தூர் மேட்டுபாளையம் ரோட்டின் இரு மருங்கிலும் எத்தனையோ ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த ,இன்று இல்லாமல் போய்விட்ட புளிய மரங்களின் நினைவு அனாவசியமாய் வந்தது 

Friday, May 25, 2012

வணக்கம்   நண்பரகளே !
           பல  நாடகளுக்குப் பிறகு  கிக்கானி  பள்ளியில் நடை பெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப  போயிருந்தேன் .
       நான்கு  பேர் பங்கு கொண்ட நிகழ்ச்சி. கவிங்கர்கள் . அதில் இசைக்கவி ரமணன்  அவர்கள் பாட்டு உள்ளத'தைக  கொள்ளை கொண்டது. பாடுகிற விதத்தில்  ஒரு கம்பீரம் . இனிமை. ஓடக்காரன் பற்றி  ஒரு பாடல் அவ்வளவு அருமை .
        சுகி சிவம்  அவர்களின்  தலைமை  வேறு. கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்?.
      அதைவிட மகிழ்ச்சியான விஷயம் . பார்வையாளர்கள் .மிக உயர்வான ரசனையுள்ள ரசிகர்கள் . நல்ல கூட்டம் .அவர்களோடு அமர்ந்து இரசிப்பது  மிகவும் சுகமாக இருந்தது.
         இந்த  இடத்தில  மரபின் மைந்தன் முத்தையாவை க்  குறிப்பிடாமல் இருக்க முடியாது .
 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை வழங்கி ஒரு பெரிய இரசிகர் கூட்டத்தையே  உருவாக்கியுள்ளார் அவரும் கவிதை வாசித்தார் .  எல்லாருடைய  கவிதைகளுமே  சிறப்பாக  இருந்த அந்த கவி அரங்கம்  ஒரு மறக்கவொண்ணாத   கவிதை  அனுபவம் .

Thursday, May 3, 2012

வணக்கம் . ஜெயசக்தி /
       பெங்களுருக்கும; எழுத்தாளர்களுக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல இருக்கு .சுஜாதா  சார் அங்கே வெகு  நாட்கள் இருந்தார் .வாஸந்தி மேடம் கூட ! இப்போ  நான்.
  என்ன விஷயம்ன்னு  கேக்கரரீங்கலா?
        பேரன் பிறந்திருக்கிறான் இல்லையா ? இனிமே   கோயமுததுருக்கும்   . பெங்களுருக்கும்  ஷட்ல் தான் ?
             இங்கே  வயதான தாய் . அங்கே  பேரன் .பொறுப்புக்கள் அழைக்கிறது.
 நிற்க 
      சில     மடாதிபதிகள்  இப்போதல்லாம்  நகைச்சுவை   நாயகர்கள  ஆகிப் போனார்கள்..யாராக இருநதால் என்ன? நிறைய  பணம்  புழங்கும்  இடங்களில் அரசின் கண்காணிப்பு அவசியம .  அதற்கு அரசியல் வாதிகள்  சுத்தமாக  இருக்க  வேண்டுமே? விச்வேஸ்யரையா  பற்றி எப்போதோ படித்தது.
          அப்போதெல்லாம்  மையை  தொட்டு  எலு தும்  பேனாக்கள் . ஒரு   பாட்டலில்  அரசாங்க  செலவில்  வாங்கிய  மை. இன்னொன்றில் சொந்தக்காசில்  வாங்கிய  மை.அரசாங்க வேலைகளுக்கு    ஒரு   அரசின் காசில் வாங்கிய மை . சொந்தமாக எழுதும் விஷயங்களுக்கு   சொந்த மை. 
               லட்சக்கநக்கான      கோடிகள் ஊழல்  என்று   அடிபடும்போது   அடிவயிற்றில்  இருந்து    கவலை    எழுகிறது/ 
             டி. வி . யில்  ஒரு நல்ல தொடர் போய்க்கொண்டு    இருந்தது . பிரிவோம்  சந்திப்போம்   என்று. எனக்கென்னமோ  அந்த தொடருக்கு  இனிமேல்  நல்ல  ஸ்கோப  இருக்கிறது  என்று      தொன்றுகிறது. எதற்காக  இப்படி கழுத்தை  நேரிக்கிரர்கள் ?
  பேரன்  பற்றி  ஒரு கவிதை 
    
    போக்கை  வாய்  சிரிப்பினிலே 
          பொல்லாத   கவலை எல்லாம் 
      தக்கையை  போல்    பறக்குதடி    
              தாலேலோ  தாலேலோ 
    வழக்கம்  போல் எழுத்துப்பிழைகள் ;   கண்டுக்காதிங்க.
  அன்புடன்
   ஜெயசக்தி 
  



   



  .           




Thursday, April 19, 2012

என்னுடைய தமிழ்த்தேன் பதிப்பகத்தின் இரண்டாவது  நாவல்  நானென்றும் நீஎன்றும் முதல் பாகம் வெளிவருகிறது. 2 ம பாகம் தயாரிக்க வேண்டிய அவசியம்.   
    அவகாசம் கிடைக்கும்போது   பிளாகுக்கு வருகிறேன் .அதுவரைக்கும் சின்ன பிரேக் 

Saturday, April 14, 2012

படித்தது
        சென்னையில் நந்தனம் பகுதியல் குடும்ப நண்பர்கள் இருந்தார்கள். போக்குவரத்து உண்டு. இது என்ன பெயர் என்று யோசித்தது உண்டு.இப்படி ஒரு நந்தன ஆண்டில் உருவாக்கப்பட்ட பகுதியாம் .கோவையிலும்  நிறைய  இடங்களுக்கு சரித்திர பின்னணி உண்டு. அழகிய கோவையை  வைத்து ஒரு பீரியட் நாவல் எழுத ஆசை. பார்க்கலாம்
     அழகிய ஒரு குறுந்தொகை பாடல் படித்தேன். நாளைக்கு அதை பற்றி ....!
 பகிர்வது
     இன்றைக்கு  கிருஷ்ணமுர்த்தி என்னிடம் பேசினார்.என்னுடைய  உயிரஅகத்தே  ஒளியாகி நாவல் மிகவும் பிடித்ததாம்.
     எந்த கிருஷ்ணமூர்த்தி தெரியுமா?   அப்துல்கலாம் அவர்களுக்கு  மிகவும் பிடித்த மனிதர்  அவரைபற்றி  நாளைக்கு . விஷயம் வேறொன்றும் இல்லை . மின்சாரம் எந்த நேரம் வேண்டுமானாலும்  போகலாம்.
 கவிதை
    எனது கவிதைகளை
     வாசித்து காதலிக்கிற
    அவலழகிய   கவிதைய
    காதலித்து    வாசிக்க
    காத்திருக்கிறேன்
  எனது கதாநாயகன் சிவநாதன் உருகி சொன்ன கவிதை            

Thursday, April 12, 2012

இன்னொரு புத்தாண்டு பிறக்கிறது 
        பூச செண்டுக்கு  கை கால் முளைத்தார்  போன்று  கைகாலை ஆட்டிக்கொண்டு   பேரன் சிரிக்கையில் உலகம் மறக்கத்தான்  செய்கிறது.
         சுகமான  புது வரவுகளுக்கும் கனமான இல ப்புக்களுக்கு  நடுவே  வாழ்க்கை நகரத்தான் செய்கிறது.
   ஆனந்த விகடனில் ராஜு முருகனின் எழுத்துக்களில் அனுபவ குவியல்களின் ஆழம் தெரிகிறது .வெறும் ரசனை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல் எல்லா வகையான மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை தெரிகிறது.அலசல் தெரிகிறது
      இந்த வாரம் ஆண்டுக்கணக்காக ஒரே தொழிலை சலிப பில்லாமல்  செய்கிற யதார்த்தமான மனிதர்களை பற்றி பதிவு செய்திருக்கிறார் . 
     ஒரு விஷயத்தில் திருப்தி. எனக்கு மட்டும்தான் ஒரு வித சலிப்பு  தோன்றுகிறதோ என்று எண்ணியதுண்டு .ஆனால்  இப்படி ஆட்கள் நாடு நகரத்திலே விரவியிருக்கிறார்கள்  என்பதில் திருப்தி 
        இன்னொரு விஷ்யம்  என்னவென்றால்  ஒரேமாதிரி வாழ்கையை  சலிப்பில்லாமல்  வல்கிரவர்களை  பார்த்து ஒரு   பொறாமை . கொடுத்து வைத்தவர்கள் எதைபற்றியும் கவலை படாமல் , எந்த அவஸ்தையும் இல்லாமல்   வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா அவர்கள்   பாக்கியம் செய்தவர்கள் .
      இந்த இங்கிலீஷ் டு தமிழ் கொஞ்சம் அவஸ்தை படுத்தத்தான்  செய்கிறது.கொஞ்ச நாளில் பழகி விடுவேன். அப்புறம் நிறைய விஷயங்கள் வந்து விழும் என்று நம்புகிறேன் காத்திருங்கள் 
      
            

Sunday, April 1, 2012

அன்பு நண்பர்களே
     நிறைய எழுத ஆசையாக இருக்கிறது . எதை எழுதுவது எதை விடுவது  என்பதுதான் புரிய வில்லை . இப்படி வைத்துகொள்கிறேன் .
 கொஞ்சம் கவிதை .
கொஞ்சம்  விமர்சனம்
 கொஞ்சம் இலக்கியம்    சரியா
   இன்றைக்கு  கவிதை  என்னோடதுதான்.

பூத்த புதுக்கவிதை
புத்தகத்தில் மட்டுமல்ல
அம்மாவின் இடுப்பிலும்தான் !

 விமர்சனம்
 கூடங்குளம்  அணுமின்நிலையம்  . ௨ ஜி  ஊழல் போன்ற விஷயங்களில் நடுத்தர குடும்பங்கள் எல்லாம் பட்டும் படாமல் இருந்து மிக பெரிய தவறு செய்கிறோமோ என்று கவலையாக இருக்கிறது. குறைந்ந்த பட்சம் நமது
அதிருப்தியையாவது  பதிவு செய்ய வேண்டாமா . நான் செய்கிறேன்
இலக்கியம் .

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா  கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி  நல்லவர்  ஆடவர்
அவ்வழி  நல்லை வாழிய நிலனே

 இது ஒரு  ஔவையார் பாட்டு
        
  இதை நான்  எளிமைபடுத்தியிருக்கிறேன்    புறநானூற்றில்  வருகிறது   

      நாடு என்றே இருப்பினும் சரியே
          காடு  என்றே இருப்பினும்  சரியே
     மேடு  என்ற நிலையே ஆகுக
          பள்ளம் என்றே விளங்கினும்   சரியே
     இடந்தான் எதுவாய் ஆயினும்  மக்கள்
         எங்கு நல்லராய்  உளரோ அந்த
      இடத்தில் நிலமே நீயும் நல்லது
           ஆவாய் நீதான்  நீடு வாழ்க
  
 நாம்  நல்லவராய் இருக்கிறோம் .  வல்லவராய்  இருக்கிறோமா  குறைந்த பட்சம் கருத்து   தெரிவிப்பதிலாவது?    
      
     
  



 

Saturday, March 31, 2012

அன்பு நண்பர்களே
     தொடர்ந்து எழுதுவதாக உள்ளேன் . ஏப்ரல் 1 ன்னு நினைக்காதீங்க . நிஜம்  நிஜமோ நிஜம்.
வெகு நாட்களுக்கு பிறகு கோவை கம்பன் விழாவில் மேடை ஏறினேன். மிக சுகமாக இருந்தது .சிறந்த இலக்கியவாதியும் ராஜ் டி வி புகழ் நடுவருமான அப்துல் காதர் தலைமை .
தலைப்புதான் கொஞ்சம் ஆழம் . ஆழமுன்னா ஆழம் . வெகு ஆழம் தலைப்பு கேட்டிங்களா  திருக்குறளின்  குரல் ஓங்கி ஒலிப்பது   பாலகாண்டதிலா அயோத்யா  காண்டதிலா  சுந்தர காண்டத்திலா . இதுதான் தலைப்பு 
    கோவை கம்பன் கழகத்தின் மார்கண்டேய  செயலர்  80 ஐ தாண்டிய  நஞ்சுண்டன்  அய்யா  அவர்களின் தூண்டுதல்தான்  எனது  பங்களிப்புக்கு காரணம் .
       பழைய  நினைவுகள்  பொங்கி எழுந்தது . பேசிய பேச்சுக்கள் , படித்த கவிதைகள்  எல்லாம் நினைவுக்கு வந்தது.அந்த  மேடை  அப்படி ஒரு மேடை .நஞ்சுண்டன் அய்யா அவர்களை போன்றவர்கள் செய்கிற பணி பாராட்டுக்குரியது .ஏனென்றால்  தரமான ரசனை உணர்வை காப்பாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்கள்தான்
 

 



Monday, March 12, 2012

நேற்று ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன் .


வீரமணி என்ற ஒரு நண்பர் . ராஜேஸ்வரி என்ற அற்புதமான பெண்ணை திருமணம் செய்தார் .இதில் என்ன விசெஷேம் என்கிறிர்களா . மணமகள் ஒரு மாற்றுதிரனாளி. திருமணம் மிக எளிமையாக விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா தாலி எடுத்து கொடுக்க நடைபெற்றது .


வாழ்கையை இப்படி எதிர்கொள்கிற துணிவு எத்தனை பேருக்கு வரும்.நான் கலந்து கொண்டதில் மணமகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.அன்பும் கண்ணீருமாய் நன்றி சொன்னார். படங்கள் கேட்டிருக்கிறேன். வந்தவுடன் பார்வைக்கு வைக்கிறேன் .


நான் பார்த்த நல்ல இரு இளம் உள்ளங்களை நீங்களும் பாருங்கள் .