Sunday, April 1, 2012

அன்பு நண்பர்களே
     நிறைய எழுத ஆசையாக இருக்கிறது . எதை எழுதுவது எதை விடுவது  என்பதுதான் புரிய வில்லை . இப்படி வைத்துகொள்கிறேன் .
 கொஞ்சம் கவிதை .
கொஞ்சம்  விமர்சனம்
 கொஞ்சம் இலக்கியம்    சரியா
   இன்றைக்கு  கவிதை  என்னோடதுதான்.

பூத்த புதுக்கவிதை
புத்தகத்தில் மட்டுமல்ல
அம்மாவின் இடுப்பிலும்தான் !

 விமர்சனம்
 கூடங்குளம்  அணுமின்நிலையம்  . ௨ ஜி  ஊழல் போன்ற விஷயங்களில் நடுத்தர குடும்பங்கள் எல்லாம் பட்டும் படாமல் இருந்து மிக பெரிய தவறு செய்கிறோமோ என்று கவலையாக இருக்கிறது. குறைந்ந்த பட்சம் நமது
அதிருப்தியையாவது  பதிவு செய்ய வேண்டாமா . நான் செய்கிறேன்
இலக்கியம் .

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா  கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி  நல்லவர்  ஆடவர்
அவ்வழி  நல்லை வாழிய நிலனே

 இது ஒரு  ஔவையார் பாட்டு
        
  இதை நான்  எளிமைபடுத்தியிருக்கிறேன்    புறநானூற்றில்  வருகிறது   

      நாடு என்றே இருப்பினும் சரியே
          காடு  என்றே இருப்பினும்  சரியே
     மேடு  என்ற நிலையே ஆகுக
          பள்ளம் என்றே விளங்கினும்   சரியே
     இடந்தான் எதுவாய் ஆயினும்  மக்கள்
         எங்கு நல்லராய்  உளரோ அந்த
      இடத்தில் நிலமே நீயும் நல்லது
           ஆவாய் நீதான்  நீடு வாழ்க
  
 நாம்  நல்லவராய் இருக்கிறோம் .  வல்லவராய்  இருக்கிறோமா  குறைந்த பட்சம் கருத்து   தெரிவிப்பதிலாவது?    
      
     
  



 

No comments: